1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A case filed against udhayanidhi win

உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

உதயநிதி
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவரும் தெரிந்ததே
 
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில்...?