செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது.. மின்சார ரயில்கள் தாமதமாக வாய்ப்பு..!
தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த சரக்கு ரயில் திடீரென செங்கல்பட்டு அருகே தடம் புரண்டதை அடுத்து செங்கல்பட்டு கடற்கரை மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தண்டபாளத்தை விட்டு இறங்கியதாகவும் அந்த ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி - சென்னை சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் தாமதமாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களும் தாமதமாக சென்னைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மின்சார ரயிலில் நம்பி இருக்கும் பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva