Daily Horoscope
✕

சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்: சென்னை போலீஸ் அறிவிப்பு

Written By siva
Updated: திங்கள், 3 அக்டோபர் 2022 (16:15 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடப்பதால் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 
 
அதன்படி ஈகா சந்திப்பில் இருந்து சென்டிரல் நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் பர்னபி சாலை சந்திப்பில் இருந்து, இடதுபுறம் திரும்பி பிளவர்ஸ் சாலை வழியாக போக வேண்டும். 
ஆனால் அதே நேரத்தில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக தடை இல்லை. 
 
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஆர்பிஐ வட்டி உயர்வால் 2-வது நாளாக பங்குச்சந்தை கரடியின் பிடியில்.. ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

கடும் எதிர்ப்பு எதிரொலி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் கொண்டு வரும் முடிவு ஒத்திவைப்பு?

வெற்றிப் பயண திட்டம் எதிரொலி!.. அரசு பேருந்தில் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பு...

1000 பேரை பணியில் இருந்து நீக்குகிறது அமேசான்.. இந்தியர்கள் எத்தனை பேர்?

எனக்கு ஒன்னுமே புரியல!.. பேசிக்கிட்டு இருக்கேன்!.. வகிதா புகாருக்கு முத்துக்குமரன் விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments