திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:34 IST)

இன்றுமுதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானம்: கட்டணம் எவ்வளவு?

Flight
சென்னையில் இருந்து நேரடி விமானம் அயோத்திக்கு இன்று முதல் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து அயோத்தி கோயில் செல்லும் ராம பக்தர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களை வசதிக்காக நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து நேரடியாக அயோத்திக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 

 
அந்த வகையில் இன்று முதல் சென்னையில் இருந்து அயோத்தி செல்வதற்கான நேரடி விமான சேவை தொடங்குகிறது. இதற்கான கட்டணம் ரூபாய் 5810 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இருந்து லக்னோ சென்று அங்கிருந்து அயோத்தி செல்ல வேண்டிய நிலையில் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சென்னையில் இருந்து நேரடியாக அயோத்திக்கு செல்ல விமானம் இயங்குகிறது. மேலும் இந்த விமானங்களை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran