அயோத்தி கோவில் திறப்பு எதிரொலி: சோனியா காந்தி தேர்தலில் போட்டி இல்லையா?
அயோத்தி கோயில் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ராஜ்யசபா எம்பி ஆக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி ஒருவர் மட்டுமே ரேபேலி என்ற தொகுதியில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கூட அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த முறை மீண்டும் சோனியா காந்தி ரேபேலி தொகுதியில் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க வலுவான வேட்பாளரை இறக்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் தோல்வி பயம் காரணமாக சோனியா காந்தி தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் அனைத்துமே பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சோனியா காந்தி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva