ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:28 IST)

வேங்கைவயல் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் கேட்ட அதிரடி கேள்வி..!

வேங்கை வயல் விவகாரம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த வழக்கை விசாரணை செய்வீர்கள் என அதிரடியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது 
 
ராஜ்கமல் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவுக்கு அரசு தரப்பில் இதுவரை 324 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 
 
மேலும் விசாரணையை முடிக்க இன்னும் எட்டு வார கால அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.  அப்போது இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இன்னும் எவ்வளவு நாட்கள் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். 
 
அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
 
Edited by Mahendran