திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:28 IST)

ரயிலில் கேங் வார்; கற்களை வீசி தாக்கிய மாணவர்கள்! – அதிர்ச்சி வீடியோ!

Train
சென்னை புறநகர் ரயில்களில் சென்ற இரு வேறு கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கி கொண்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியின் மாணவர்களுக்கும், ப்ரெசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது வாடிக்கையாக உள்ளது.
நேற்று திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ரயில் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நின்றிருந்தபோது இறங்கி சென்று எதிரே வந்த அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் பயணித்த பிரெசிடென்சி கல்லூரி மாணவர்கள் மீது தண்டவாளத்தில் இருந்த கற்களை வீசி தாக்கினர்.

இதனால் ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் 11 மாணவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அவர்களது பெற்றோர்கள் வந்தவுடன் அறிவுரை அளித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.