சொந்த கட்சியினராலேயே ஈபிஎஸ் – ஓபிஎஸ்-க்கு நெருக்கடி! – புகழேந்தி தொடுத்த வழக்கில் ஆஜராக உத்தரவு!
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடுத்த வழக்கில் ஆஜராக ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலாக அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் ரெய்டு நடத்துவது மற்றும் வழக்கு தொடர்வது போன்றவற்றை செய்து வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு வெளியாகியுள்ளது.
அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி, சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆதாரமின்றி தன்னை நீக்கியதாக புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி ஈபிஎஸ் – ஓபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை நிராகரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 14ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.