வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (14:21 IST)

முகக்கவசம் அணியாத சென்னைவாசிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது முகக்கவசம் அணிவதில்லை என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்துள்ளது. 

 
தமிழகத்தில் 5441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 பேராக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரொனாவால் 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,072  ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது முகக்கவசம் அணிவதில்லை என்ற அதிர்ச்சியான தகவல் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடிசை பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் முகக்கவசத்தை தொடுவதே இல்லை. 
 
அதுபோல மற்ற பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 73 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை. சராசரியாக வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.