அரக்கோணம் இரட்டைக் கொலை : போராட்டத்தில் குதித்த வி.சி.க.வினர் !

Sugapriya Prakash| Last Modified சனி, 10 ஏப்ரல் 2021 (10:29 IST)
அரக்கோணம் அருகே இரட்டைக் கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் திருமாவளவன் எம்.பி. தலைமையில் வி.சி.க.வினர் போராட்டம். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கட்சி தொடர்பான வாக்குவாதம் ஒன்றின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்களை குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது.
 
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், இது குறித்து நீதி விசாரணை வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது அறிவித்தை போல அரக்கோணம் அருகே இரட்டைக் கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் திருமாவளவன் எம்.பி. தலைமையில் வி.சி.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :