நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை.. சென்னை மெட்ரோ அறிவிப்பு!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (17:52 IST)
நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
சாதாரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் நான்கு மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் நடைபெற உள்ளது. 
 
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் பங்கேற்பவர்களின் வசதிக்காக அதிகாலை 3 40 மணி முதல் சென்னை சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளை 3.40 மணிக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில் சைதாப்பேட்டை, லிட்டில் மவுண்ட், கிண்டி, விமான நிலையம், விம்கோ நகர்  சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
கலைஞர் மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் இந்த மெட்ரோ ரயிலில் பயணித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்க உத்தரவு.. அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு...

ஒரு மாணவர் கூட இல்லை.. கோவை அருகே 2 பள்ளிகள் திடீரென மூடல்..

திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.. பெற்றோர், மாணவர்கள் நிம்மதி..

மாற்று கட்சியினரை முதல்வர் விஜய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை: கார்த்தி சிதம்பரம்

கோர்ட்டில் கேஸ் போட்ட திமுக!.. விஜய் கரூருக்கு போக முடியுமா?.. இன்னைக்கு தெரியும்..

அடுத்த கட்டுரையில்
Show comments