திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (08:01 IST)

இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் என அறிவிப்பு..!

metro
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து மெட்ரோ ரயில்கள் இன்று ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தினால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் வசதியை முன்னிட்டு இன்று கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விம்கோ நகர் முதல் சென்ட்ரல் வரை 9 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

12 மணி முதல் 8 மணி வரை என்று 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என காலை 5 மணி முதல் 10 மணி வரையும், 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் இயக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார ரயில் ரத்து காரணமாக இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva