திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:58 IST)

இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்!

metro
இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்கரை அருகில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் அந்த நகரம் சென்னை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
திருமயிலை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க உள்ளதாகவும் அதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran