1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (14:22 IST)

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆறுதல் செய்தியாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
அக்னி நட்சத்திர வெயில் தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளது என்பதும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக இன்று கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை பொறுத்த வரை வறண்ட வானிலை ஆகவே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்த அதிக வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran