செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (13:21 IST)

ஏப்ரல் 19 வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிக வெப்பநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும், இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அது மட்டும் இன்றி ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை இருக்கும் என்றும் அதிக வெப்பநிலை அதிகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே அதிக வெப்பநிலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva