வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (12:22 IST)

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விறுவிறுப்பாக பெய்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் இன்னும் சில நிமிட நேரங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று முதல் நவம்பர் மாதம் 2ஆம் தேதி வரை தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
இதனை அடுத்து மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது