திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (07:27 IST)

இன்று 16 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது அந்த மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்
 
அதேபோல் நாளை 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மழை பெய்யுமா வட்டங்கள் பின்வருமாறு: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு