1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (08:23 IST)

சென்னையில் கனமழை: இன்றும் மழை தொடரும் என அறிவிப்பு!

சென்னையில் நேற்று பல இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள பல சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதியான இன்று நீலகிரி கோவை மற்றும் தென் மாவட்டங்கள் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நாளை தஞ்சை திருவாரூர் நாகை ஆகிய பகுதிகளிலும் ஆகஸ்ட் 22ஆம் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது