சென்னை பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி!
சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவர் ராஜலட்சுமி திடீரென தனக்கு தானே ஊசி போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து அவரை அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ராஜலட்சுமி கொளத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு குழந்தை இல்லை என தெரிகிறது
இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தனக்குத்தானே ஊசி போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்