கோரோனா பரவல்; பிரச்சாரத்திற்கு தடை கோரி மனு! – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதேசமயம் மறுபுறம் கொரோனா பாதிப்பும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொள்வதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்கி நடத்தி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க முடியாது என மறுத்துள்ளது. மேலும் அதேசமயம் அரசியல் கட்சிகள் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.