1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:18 IST)

நீதிமன்றம் என்ன தபால் நிலையமா? மனு கொடுத்த பெண்ணுக்கு கண்டனம்!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அரசிடம் வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் என்ன தபால் நிலையமா? என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் 20 லிட்டர் கேன்வாட்டார் விநியோகம் செய்து வரும் நிலையில் இந்த கேனை ஓப்பன் செய்து பயன்படுத்து பெண்களுக்கு சிரமமாக இருப்பதாகவும், அதனால் பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அதற்குரிய ஆணையை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த தீபா என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். 
 
 
இந்த மனுவில் தற்போது விநியோகம் செய்யப்படும் 20 லிட்டர் தண்ணீர் கேனின் வடிவத்தை மாற்றி அமைத்தால் பெண்களும் எளிதாக கையாள முடியும் என்றும் மேலும் வாட்டர்கேன்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
 
 
இந்த  வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகம் அல்ல என்றும், மனுதாரர்  இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தை தபால் நிலையம் போல் கருதவேண்டாம் என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்