ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Last Modified வியாழன், 5 செப்டம்பர் 2019 (17:48 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை திகார் ஜெயிலில் அடைக்கக்கூடாது என ப.சிதம்பரத்தை கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சற்றுமுன் நிராகரித்தது. மேலும் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முன்னதாக ப.சிதம்பரம் முன்னாள் அமைச்சர் என்பதால் அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டாலும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என
இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் அவரை திகார் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர் ஒருவர் திகார் சிறையில் அடைக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :