மக்கள் சென்ற பேருந்தில் திடீர் தீ! அலறி ஓடிய மக்கள்! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை கோயம்பேட்டில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் வழக்கம்போல பல பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் அரசு பேருந்து ஒன்று வழக்கம்போல அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தின் அடிப்பகுதியிலிருந்து திடீரென புகை எழுந்ததால் உடனடியாக பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டதோடு, ஓட்டுனரும், நடத்துனரும் இறங்கி தப்பித்துள்ளனர்.
அனைவரும் வெளியேறிய சில நிமிடங்களில் பேருந்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது, சம்பவமறிந்த தீயணைப்பு துறையினர் வேகமாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.