ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:49 IST)

இப்போ எடுக்குறேன் சூனியத்த.. ஊரை ஏமாற்றி பங்களா கட்டிய கும்பல்! – சென்னையில் பரபரப்பு!

சென்னையில் பில்லி, சூனியத்தை எடுப்பதாக கூறி பல லட்சம் ஏமாற்றிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவரும் அவருக்கு தெரிந்த வேறு ஒரு பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஒரு பெண்ணுக்கு கணவனோடு அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.

இவர்கள் குடும்பத்தில் நிலவும் சண்டைக்கு காரணம் பில்லி, சூனியமே என அதை எடுப்பதாக சொல்லி தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா மற்றும் அவரது சகோதரன், சகோதரி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அடிக்கடி ஒரு சில பூஜைகள் செய்துவிட்டு பெருமளவில் அவர்களிடம் பணத்தை வாங்கி வந்துள்ளனர். இப்படியாக தொடர்ந்து நடந்தும் தங்கள் கணவர்கள் திரும்பி வராததை கண்டு தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸார் பாத்திமா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரித்ததில் இதுபோல 20க்கும் மேற்பட்டோரிடம் சூனியம் எடுப்பதாக பணத்தை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பணத்த்தில் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பில் இந்த கும்பல் சொகுசு பங்களா ஒன்றையும் கட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.