அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தொடர அனுமதி!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக அமைச்சரவையில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர்ந்தது என்பதும் லஞ்ச ஒழிப்புத் துறையும் வழக்கு தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது