செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated: புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:36 IST)

டெல்லி நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல்: அமலாக்கத்துறை அதிரடி

herald herald
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சீல் வைத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை இன்று மாலை திடீரென சீல் வைத்துள்ளது. மேலும் தங்கள் ஒப்புதல் இல்லாமல் இந்த அலுவலகத்தை திறக்க கூடாது என அமலாக்கத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக சமீபத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த விசாரணை முடிவுக்கு பின்னர் திடீரென நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் சோதனை செய்த மறுநாளே அலுவலகத்தை சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது