சென்னை மக்களே ப்ளீஸ் ஓட்டு போடுங்க..! – மாநகராட்சி வேண்டுகோள்!
சென்னையில் வாக்குபதிவு சதவீதம் குறைவாக உள்ள நிலையில் வாக்களிக்க வருமாறு சென்னை மாநகராட்சி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
ஆனால் சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி “நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் புகார் தெரிவிக்கவும் முடியாது” என்ற வாசகத்துடன் அடங்கிய தேர்தல் வழிகாட்டு முறைகளை பதிவிட்டுள்ளது.