1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (08:03 IST)

சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

seal
சென்னை பாரிமுனை அருகே உள்ள 256 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்பதும் இந்த வாடகை ஒரு சில மாதங்களாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது
 
 இதனை அடுத்து 60 லட்சம் ரூபாய் வாடகை நிலுவையில் இருக்கும் நிலையில் அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது
 
இதனை அடுத்து வாடகை தராத சென்னை பாரிமுனை அருகே உள்ள 256 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பாரிமுனையீல் மாநகராட்சி வணிக வளாகத்தில் நீண்ட நாட்களாக வாடகை தராத கடைகளுக்கு அதிகாரிகள் வைத்ததாக கூறப்படுகிறது 
சென்னை பாரிமுனையில் உள்ள 256 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது