ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (13:29 IST)

நீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்...

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 


 
 
இந்த அமைப்பு பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.
 
இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலக வெப்பமயமாதலால் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக வெப்பமயம் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. இதன் காரணமாக 2050-ல் கடல் நீர்மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும். 
 
அதேபோல் கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகிவருவதால், கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
 
இதனால் தமிழ்நாட்டில் 2050 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரியவந்துள்ளது.
 
சுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடலில் முழ்கிவிடும். இதனால், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்றுவிடும்.
 
10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். அதோடு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.