திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (20:08 IST)

சென்னையில் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு

கனமழை காரணமாக சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இயங்கிவரும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாக 400 பேருந்துகள் குறைக்கப்பட்டதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் குறைவான பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது/ இருப்பினும் குறைவாக இயக்கப்படும் பேருந்துகளில் கூட பயணிகள் மிக மிக குறைவாகவே பயணம் செய்து வருகின்றனர்