வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:44 IST)

சென்னை புத்தக கண்காட்சிக்கு அனுமதி கோரி முதல்வரிடம் வலியுறுத்தல்!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதமே சென்னை புத்தகக் காட்சியை நடத்த திட்டமிடப்பட்டது 
ஆனால் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை பெற்று வருவதால் சென்னை புத்தகக் கண்காட்சியை விரைவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் புத்தக அமைப்பினர் நேரில் வலியுறுத்தினார் 
 
மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து இது குறித்து முடிவு தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் புத்தக கண்காட்சியை ஒத்தி வைக்கப்பட்டதால் ஏராளமான புத்தகங்கள் தேக்கமடைந்து உள்ளதாகவும் பபாசி துணை தலைவர் தெரிவித்துள்ளார்.