செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:30 IST)

இன்று முதல் மெரீனாவுக்கு அனுமதி: பொதுமக்கள் உற்சாகம்!

இன்று முதல் மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி உண்டு என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் இன்று காலையிலேயே உற்சாகமாக கடற்கரைகளில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் நடைப்பயிற்சிக்கு கூட அனுமதி இல்லை என்றும் அறிவித்து இருந்தது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என அறிவித்திருந்தது
 
இதனை அடுத்து இன்று காலையிலேயே சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள்  நடைப்பயிற்சிக்கும், கடற்கரையை  பார்க்கவும் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது