திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (20:17 IST)

நுரை மயமாகும் சென்னை கடற்கரை! மக்கள் அச்சம்

சென்னை கடற்கரை பகுதியில் தொடர்ந்து நுரைகள் ஒதுங்கி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பருவ மழை பெய்து வரும் நிலையில் அடையாறு, கூவம் ஆறுகளில் கழிவு நீர் மற்றும் மழைநீரும் கலந்து சென்று கடலில் கலந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னை பட்டினப்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை உள்ள பகுதிகளில் கடற்கரையில் தொடர்ந்து நுரைகள் ஒதுங்கி வருகின்றன.

திடீரென்று இந்த நுரைகள் எப்படி வருகின்றன என தெரியாத நிலையில் இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியம் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

கடற்கரையில் நான்கு நாட்களாக நுரையாக இருப்பதால் பொதுமக்கள் சிலர் அங்கு செல்ல அச்சப்படுவதாக கூறப்படுகிறது.