Daily Horoscope

சென்னை பப் இளம்பெண்கள் விவகாரம்.. நடந்ததே வேறு.. அதிர்ச்சி தகவல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:51 IST)
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் மதுபாரில் இளம் பெண்கள் உள்பட  சிலர் மது போதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் அங்கு வந்ததால் கலைந்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

ஆனால் இந்த சம்பவத்தில் நடந்ததே வேறு என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன. தனியார் மதுபாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த மதுபாருக்குள் 5 பேர் நுழையும் முயன்றதாகவும் தெரிகிறது.

ஆனால் மதுபாரின்  காவலர்கள் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தனியார் ஊடக செய்தியாளர் ஒருவரை வரவழைத்து அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாகவும் இதனை அடுத்து காவல் துறையினர் வந்து மதுபாரில் நடந்த சட்ட விதி மீறலை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

 அந்த ஐந்து நபர்களை மதுபாரின் காவலர்கள் உள்ளே விட்டிருந்தால் இந்த பிரச்சனை வெளியே தெரிந்திருக்காது என்றும் தங்களை உள்ளே விடாததால் பழிவாங்கும் நோக்கில் அவர்கள் காவல்துறையினரிடம் போட்டு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments