அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம்!
அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக விலை இன்றி உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொது மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தனர். இந்த நிலையில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது
கடந்த சில நாட்களாக எந்த வித கட்டணமும் இன்றி பொதுமக்கள் அம்மா உணவக உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மழை பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுகளுக்கு கட்டணம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுவரை எட்டு லட்சம் பேருக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்