செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (12:37 IST)

தமிழக அமைச்சரவையில் 11 இலாகாகளில் மாற்றம் – விவரம் உள்ளே!

தமிழக அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விவரம் இதோ…


உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவர் அமைச்சர் ஆவார் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சரவையில் 11 இலாகாகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் பெரியகருப்பன் - கூட்டுறவுத்துறை
அமைச்சர் ராமச்சந்திரன் - சுற்றுலாத்துறை
அமைச்சர் ராஜகண்ணப்பன் - கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள்
அமைச்சர் ஐ.பெரியசாமி - ஊரக வளர்ச்சித் துறை
அமைச்சர் மதிவேந்தன் - வனத்துறை
அமைச்சர் மெய்யநாதன் -  சுற்றுசூழல் துறை
அமைச்சர் சேகர் பாபு - சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை
அமைச்சர் எஸ்.முத்துசாமி - வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஆர். காந்தி - கைத்தறி, ஜவுளித்துறை
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - புள்ளியியல் துறை