தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் டிசம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்க்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுரை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Edited by Sinoj