செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:14 IST)

அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

cellphone
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் வழக்கு தொடர்ந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva