வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (13:36 IST)

இந்தியைத் திணித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் – வைகோ எச்சரிக்கை !

இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள மோடித் தலைமையிலான அரசு புதியக் கல்விக் கொள்கையின் மூலம் மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்வதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் 'பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் புதிய கல்விக் கொள்கையை வடிவமப்பதற்கான திட்டக்குழுவை அமைத்தது. இந்த குழு 2016 ஆம் ஆண்டு தனது வரைவை மத்திய அரசிடம் அளித்தது. அந்த வரைவில் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதன் மூலம் கல்லூரிக் கட்டணங்களை அதிகமாக்குதல், கல்வி சம்மந்தமாக கல்லூரிகள் எடுக்கும் விவகாரங்களில் அரசோ, நீதித்துறையோ தலையிடாது இருத்தல் போன்றவற்றை பரிந்துரை செய்தது.

இதற்குக் கல்வியாளர்களும் மாணவர்களும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.  இப்போது இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள மோடி அரசு, இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மும்மொழிக் கொளகையைத் திணிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்திப் பேசாத மாநில மக்கள் மீது இந்தியை மத்திய அரசு திணிக்கப்பார்க்கிறது.

எனவே மத்திய அரசு இந்தியைத் திணித்தால் கண்டிப்பாக 1965 ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரை விட தீவிரமான போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.