வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (08:07 IST)

தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு!

மத்திய அரசு பொது விநியோகத் திட்டப்படி வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை தமிழகத்துக்கு குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு எல்லா மாநில அரசுகளுக்கும் பொது விநியோக திட்டப்படி மண்ணெண்ணெய் அளித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் அளவைப் படிப்படியாக குறைத்து இப்போது மொத்தமாக 20 சதவீதம் வரை குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய்யின் அளவு குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.