உபி முதல்வர் யோகிக்கு கொரோனாவா? தனிமைப்படுத்தி கொண்டதால் பரபரப்பு

yogi
உபி முதல்வர் யோகிக்கு கொரோனாவா?
siva| Last Updated: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:58 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென தன்னை தானே எடுத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலருக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் முதல்வருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும், இருந்தாலும் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் ஒரு சில நாட்கள் அவர் முதல்வர் அலுவலகம் வர மாட்டார் என்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றனஇதில் மேலும் படிக்கவும் :