பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சும்மா வெளி நாடுகள் மேல பழி போடாதிங்க - கமல் ஆவேசம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வெளி நாடுகள் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கக்கூடாது என கமல் கூறியுள்ளார்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பெட்ரோல் லிட்டருக்கு 79.47 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 71.59 ரூபாயும் விற்கப்படுகிறது.
இந்தியாவிடம் இருந்து வாங்கி விற்கும் மற்ற நாடுகளில் இந்தியாவை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்பதால் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சும்மா வெளிநாடுகள் மீதே பழி சுமத்தி தப்பித்துக் கொள்ள கூடாது. மத்திய மாநில அரசுகள் நினைத்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து, மக்களின் துயர நிலையை போக்கலாம் என்றார்.