செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (07:29 IST)

கர்நாடக தேர்தல் முடிந்ததும் விலையேறிய பெட்ரோல்-டீசல்

கர்நாடக தேர்தல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள், நேற்று முன் தினம் கர்நாடக தேர்தல் முடிந்ததும் இன்று மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன.
 
கர்நாடக தேர்தல் காரணமாக கடந்த 15 தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
 
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நேற்றைய விலையை விட பெட்ரோல் 18 காசுகளும், டீசல் விலை 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி கடந்த 15 தினங்களாக ஏற்றாத பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் அதிகளவு உயர்த்தப்படும் என்ற வதந்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல், விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.