வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (15:05 IST)

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகள் கிடையாது: தமிழ்நாடு அரசு

assembly
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்  பள்ளிகளை சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
 
சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கட்டணம் நிர்ணயிப்பதில்லை என்பதால் அந்த பள்ளிகளை 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் காரணமாக கூறியுள்ளது.
 
25% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தான் தமிழ்நாடு அரசு இந்த பதிலை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். இந்த நிலையில் இந்த திட்டத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்  பள்ளிகளை சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva