வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (11:01 IST)

போலீசார் கட்டுபாட்டில் இருந்த முக்கிய குற்றவாளி உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நிகழ்ந்த சம்பவத்தில் போலீசார் கட்டுபாட்டில் இருந்த முக்கிய குற்றவாளி உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவர்களின் கல்வி சிறந்த முறையில் அமையவும் அரசு உரிய உதவிகளை எடுக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டில் பாதிக்கபட்ட அனைவருக்கும் நியாயமான நீதி கிடைக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை பெற வேண்டும்.மேலும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு குற்றவாளி, எலி மருந்தை உட்கொண்டாார் என்றும், அவரது தந்தை சாலையில் செல்லும் போது தவறி விழுந்து இறந்தார் என்றும் சொல்வது சந்தேகத்தை எழுப்புகிறது. உள்ளூர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. எனவே CBCID விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும். 
 
மேலும் இது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது என்று கூறினார்