காவிரி விவகாரம்; பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுனர் சந்திப்பு
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள் குறித்து பேச, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் சந்தித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. மேலும் கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவ அமைப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகளைப் பற்றி பேசி வருகிறார். இதனையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசவிருக்கிறார் தமிழக ஆளுனர்.