வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஏப்ரல் 2018 (15:32 IST)

மோடிக்கு எதிராக களமிறங்கிய இந்து அமைப்பு!

மோடி அரசும், யோகி அரசும் ராமர் கோயில் கட்டித் தருவதாக ஆட்சியைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றிவிட்டது என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்ப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலத்துக்கொண்ட பேசிய அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
மத்தியில் ஆளும் மோடி அரசு மற்றும் மாநில யோகி அரசும் ராமர் கோயில் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியால்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் இப்போது அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக கதை சொல்கிறார்கள்.
 
பாஜக ராமர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டது. அதுமட்டுமல்லாமல் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அரசு ஒரு முன்னேற்றமும் புரியவில்லை. 20 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 
 
அதுமட்டுமின்றி பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த 4 வருடங்களாக நான் மோடியிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் தற்போது இந்த கேள்விகளை எழுப்புகிறேன் என்று பேசியுள்ளார்.
 
சிவ சேனா கட்சி ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வந்தாலும் தற்போது பாஜகவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.