இந்த நாள் மோடிக்காவே கொண்டாடப்படுகிறது; ஜிக்னேஷ் மேவானி
முட்டாள்கள் தினம் இந்திய பிரதமர் மோடிக்காவே கொண்டாடப்படுகிறது என்று ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக களமிறங்கி பாஜகவிற்கு எதிராக வெற்றி பெற்றார். இவர் மோடியையும் மோடி அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது முட்டாள் தினமான இன்று இந்திய பிரமதமர் மோடியை முட்டாள் என்று குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அதில்,
நரேந்திர மோடி இந்த முட்டாள்கள் தினத்தை புதிய உயரமான இடத்துக்கு எடுத்து சென்றுள்ளார். இந்த நாள் குறிப்பாக அவருக்கானது. எங்களுடைய வாழ்த்துக்கள் எப்போதும் அவருக்கு இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.