திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (20:58 IST)

பைக் மீது கார் மோதி விபத்து- புதுமாப்பிள்ளை பலி....

accident
சிவகங்கை  நெடுஞ்சாலையில்  கோர விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரரைக்குடி அருகே உள்ளா    நெற்புகப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மதன். இவர் வெளியாட்டில் பணி செய்து வரும் நிலையில், இவருக்கு நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

இந்த  நிலையில் புதுத்தம்பதியர் இருவரும் இன்று காரைக்குடி சென்ற்விட்டு, சோந்த ஊருக்கு இருக்கர வாகனத்தில் திரும்பி வந்தனர்.

திருச்சி  ராமேஸ்வரம், தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடைப் பொய்மை என்ற பகுதியில், அவர்கள் வந்தபோது,எதிரே வந்த ஒரு இனோவா கார் இவர்கள் மீது மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில், மதன் பலத்தை காயமடைனந்தார், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகிஉறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 எதிரே காரில் வந்த 7 பேருக்கு லேசானகாயங்கள்  மட்டும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
Edited by Sinoj