திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:26 IST)

அருணாசலபிரதேசத்தில் தீ விபத்து: 700 கடைகள் எரிந்து நாசம்!

arunachalapradesh
அருணாசல பிரதேசதிதில்  ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன.

அருணாசல பிரதேசம் மாநில இடா நகரில் பழமையான சந்தை ஒன்று உள்ளது. இதில், நூற்றுக் கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீப் பிடித்தது. எல்லா கடைகளுக்கும் இந்த தீ பரவியது நிலையில் 700 கடைகளும் எரிந்து நாசமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து  போயின.

Edited by Sinoj